செய்திகள்

கினிகத்தேனை பொலிஸாரின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை (படங்கள்)

பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோனின் பணிப்புரைக்கமைய பொலிஸ் நடமாடும் சேவை ஒன்று 30.05.2015 அன்று கினிகத்தேனை பொலிஸாரின் ஏற்பாட்டில் கினிகத்தேனை அபினவாரம விகாரையில் இடம்பெற்றது.

இந்த நடமாடும் சேவையில் சுகாதார முகாம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு செயலமர்வு மற்றும் மூக்குகண்ணாடி வழங்குதல் போன்ற சேவைகள் இடம்பெற்றது.

இதன்போது கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்த அம்பகமுவ பிரதேசத்தை சேர்ந்த யாமனி துலாஞ்சலிக்கு கினிகத்தேனை நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

இதன் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

DSC09687

DSC09686

DSC09682

DSC09676

DSC09672

DSC09659

DSC09655

DSC09653

DSC09650