செய்திகள்

கிராமவாசிகள் மோதல்: இருவர் பலி

பதியதலாவ பகுதியில் இரண்டு கிராமங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பதியதலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடுபஹர மற்றும் கெஹெல்உல்ல ஆகிய இரு கிராமங்களுக்கு இடையில் மோதல்கள் இடம்பெறுவதாக பதிவாகியது.

கடுபஹர கிராமத்தில் இருந்து லொறியில் வந்த 6 பேர் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் 28 வயதான ஒரு குழந்தையின் தந்தை.மற்றுமொரு நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.