செய்திகள்

கிளிநொச்சியில் காணாமல் போனோரை மீட்டுத்தருமாறுகோரி கவனயீர்ப்புப் போராட்டம்

இலங்கையில் கடந்தகாலத்தில் காணாமல்போனோரை மீட்டுத்தருமாறுகோரி எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி யு9 வீதியிலுள்ள பழைய கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த கிளிநொச்சி மாவட்ட காணாமல்போனாருக்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இப்போராட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை, நகரசபை உறுப்பினர்கள், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், புத்திஜீவிகள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு குரல்கொடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட காணாமல்போனோர் அமைப்பு எதிர்பார்த்து நிற்கின்றது.