செய்திகள்

கிளிநொச்சியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நடுவப் பணியகம் திறந்து வைப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அலுவலகம் ஏ9 வீதி, கரடிப்போக்கு சந்தியில் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன், கட்சியின் வடக்கு, கிழக்கு மாவட்டங்களின் அமைப்பாளர்கள், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.