செய்திகள்

கிளிநொச்சியில் மாவீரர் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது – கிளிநொச்சி நீதிமன்றம் இன்று தடை

கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில் மற்றும் தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல்களை அனுஷ்டிக்க கூடாது என்று சி.சிறிதரன் எம்பி உள்ளிட்டோருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.கிளிநொச்சி அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு இன்று காலை சென்ற கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளார்.கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1679 /20 என்ற வழக்கின் பிரகாரம் 21ம் திகதி முதல் 27ம் திகதி வரையான நாட்களில் எந்தவிதமான அஞ்சலி நிகழ்வுகளையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நிகழ்வுகளை நேற்று வவுனியாவில் நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் காரியாலயத்தில் நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1679 /20 என்ற வழக்கின் பிரகாரம் 21.112020 தொடக்கம் 27.11.2020 வரையான நாட்களில் எந்தவிதமான அஞ்சலி நிகழ்வுகள் எதனையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளருக்கும் இன்று கிளிநொச்சி பொலிஸாரினால் நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.(15)