செய்திகள்

கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு மு.கா வலியுறுத்து

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லின் காங்கிரஸ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

முஸ்லிம்களுக்கு சொந்தமான பல காணிகள் இன்னமும் மீள அளிக்கப்படவில்லை என்றும் இதனால் அந்த மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்வதாகவும், பொதுத் தேர்தல் வரவிருக்கின்ற நிலையில் இந்த விடயத்திற்கு தீர்வு ஒன்றை காணுமாறும் வலியுறுத்தி முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.