செய்திகள்

வடக்குக்கு பலிஹக்கார, கிழக்குக்கு ஒஸ்ரின் ஆளுநர்களாக இன்று நியமனம்

புதிய ஆளுநர்கள் 6 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் , சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம், ஊவா மாகாணம் ஆகியவற்றுக்கே புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

வடக்கு ஆளுநர் நியமனப் பத்திரத்தைப் பெறுகின்றார்

வடக்கு ஆளுநர் நியமனப் பத்திரத்தைப் பெறுகின்றார்

இதன்படி வடக்கு மாகாண ஆளுநராக ஏச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்காரவும், கிழக்கு மாகாண ஆளுநராக ஒஸ்ரின் பெர்னான்டோவும், சப்ரகமுக மாகாண ஆளுநராக பி.எம்.ஏ.ஆர்.பெரேராவும், மத்திய மாகாண ஆளுநராக சுராங்கனி எல்லாவலவும், வடமத்திய ஆளுநராக பி.பி.திஸநாயக்காவும், ஊவாமாகாண ஆளுநராக எம்.ஜி.ஜெயசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.