செய்திகள்

கிழக்கு உக்ரைனில் மருத்துவமனைமீது எறிகணைதாக்குதல்

கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டொனெஸ்டக் நகர மருத்துவமனை மீது எறிகணையொன்று விழுந்து வெடித்ததில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
வெளிநோயாளர்களுக்கான சேவையை வழங்கிவந்த மருத்துவமனையொன்றே எறிகணை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. நோயாளிகளும் மருத்துவ பணியாளர்களுமே கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்துள்ளனர்.
பலியானவர்களின் உடல்களை மருத்துவமனைக்கு வெளியே காணமுடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட நகரம் தொடர்ச்சியான எறிகணை தாக்குதலுக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.