செய்திகள்

கிழக்கு மாகாணத்திலும் மீள்குடியேற்றம் பூர்த்தியடையவில்லை: நேரில் பார்வையிட்ட சுரேஷ்

கிழக்கு மாகா­ணத்தில் மீள்­கு­டி­யேற்றம் முடி­வ­டைந்­து ­விட்­டது என்று முன்­னைய அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திற்குச் சொன்­னது பச்சைப் பொய். போரினால் இடம்­பெ­யர்ந்த தமிழ்­மக்­க­ளுக்கு இது­வரை எது­வுமே வழங்­கப்­ப­ட­வில்லை என்­பது இங்கு நேரில் வந்­து­பார்த்­த­போ­துதான் தெரி­ய­வந்­தது. எனவே தமிழ் மக்கள் வாக்­க­ளித்து வந்த ஜனா­தி­ப­தியும் புதிய அர­சாங்­கமும் விரை­வாக இப்­பி­ரச்­சி­னைக்­குத்­தீர்வு காண­வேண்டும்.

இவ்­வாறு தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட எம்­.பி.­ யு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் அம்­பாறை மாவட்­டத்­திற்கு விஜ­யம்­செய்து வளத்­தாப்­பிட்­டியில் உரை­யாற்­று­கையில் தெரி­வித்தார்.

யாழ்.மாவட்ட எம்பி சுரேஷ்பிரே­மச்­சந்­திரன் வன்னி மாவட்ட எம்.பி. சிவ­சக்­தி­ஆ­னந்தன் ஆகியோர் நேற்று வியா­ழக்­கி­ழமை அம்­பா­றை­ மா­வட்­டத்­திற்கு திடீர் விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டனர். அதன்­போது 4ஆம் கொலனி வளத்­தாப்­பிட்டி தம்­பி­லுவில் போன்ற கிரா­மங்­க­ளுக்கும் விஜயம் செய்­தனர். அவர்களை முன்னாள் எம்.பி. குண­சே­கரம் சங்கர் வர­வேற்று அப்­ப­கு­தி­க­ளைக்­காண்­பித்தார்.

வளத்­தாப்­பிட்டி பள­வெ­ளிக்­கி­ராம சிவன்­கோவில் முன்­றலில் மக்கள் தலைவர் த.துரை­சிங்கம் தலை­மையில் கூட்­ட­மொன்று கொட்டும் மழைக்கு­ மத்­தியில் நடை­பெற்­றது. முன்­ன­தாக சிவன் ஆல­யத்தில் பிர­த­ம­குரு சிவஸ்ரீ பர­ம­லிங்கம் குருக்கள் விசேட பூஜையை நடத்­தி­வைத்தார். அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்:

“வடக்கில் மட்­டும்தான் மீள்­கு­டி­யேற்றம் நடக்­க­வில்லை. மாறாக கிழக்கில் மீள்­கு­டி­யேற்றம் முடி­வ­டைந்­து­விட்­டது என்ற தவ­றா­ன­செய்தி சர்­வ­தே­ச­மெங்கும் திட்­மிட்டு முன்­னைய அர­சாங்­கத்தால் பரப்­பப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால் இங்கு நேர­டி­யாக விஜயம் செய்து பார்த்­த­போ­துதான் தெரி­ய­வந்­தது கிழக்கில் பல தமிழ்க்­கி­ரா­மங்களில் இன்­னும்­மீள்­கு­டி­யேற்றம் நடக்­கா­ம­லுள்­ளது. பாதி­ கு­டி­யே­றிய பல கிரா­மங்­க­ளுக்கு அடிப்­படை வச­திகள் செய்­து­கொ­டுக்­கப்­ப­டாமல் மீண்டும் அவர்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

நாம் எல்­லைக்­கி­ராம மக்­களின் நலன்­களை கவ­னிக்­க­வேண்­டிய கட­மைப்­பா­டுள்­ள­வர்­க­ளா­க­வுள்ளோம். எனவே அவை தொடர்­பான தர­வு­க­ளைச் ­சே­க­ரித்து முழு­மை­யான அறிக்­கை­களை தந்தால் நாம் உள்­ளூரிலோ வெளி­நா­டு­க­ளிலோ அர­சாங்­கத்­து­டனோ நிறு­வ­னங்­க­ளு­டனோ பேசும்­போது அதற்­கான உத­வி­க­ளைப் ­பெற்­றுத்­த­ர­மு­டியும். பிரதேச செய­லாளர் அல்­லது கிராம சேவை­யா­ள­ரூடாக சரி­யான தக­வல்­க­ளைப்­பெ­ற­லா­மென்று நாம் நம்­ப­வி­ல்லை.

இங்கு பல­த­ரப்­பட்ட பிரச்­சி­னை­களை நேர­டி­யா­கக்­கண்­ணுற்றோம். நானும் சிவ­சக்தி ஆனந்தன் எம்.பி.யும் இவற்­றைக்­கண்டு அதிர்ச்­சி­ய­டைந்தோம். இங்கு நிலம் சூறை­யா­டப்­பட்­டி­ருக்­கி­றது. தொல்­பொருள் புதை­பொருள் என்று கூறி மக்­க­ளது காணி­க­ளுக்கு எல்­லைக்­கற்கள் போடப்­பட்­டுள்­ளன. இங்கும் அதைக்­காண்­கின்றோம்.

தமிழ்­மக்­க­ளா­கிய நாம் என்­று­மில்­லா­த­வாறு இந்த ஜனா­தி­ப­தி­யையும் புதிய அர­சாங்­கத்­தையும் ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள் எனவே எமது பிரச்­சி­னை­களை உரி­மை­யோடு எடுத்­துச்­சொல்ல எமக்கு அரு­க­தை­உண்டு. அவர்­க­ளுக்கு அவற்றை தீர்த்­து­வைக்­க­வேண்­டிய கடப்­பாடும் உண்டு. எமது பிரச்­சி­னை­களை புதிய அர­சாங்­கத்­திடம் தெரி­விப்போம். அவற்றைத் தீர்த்­து­வைப்­பார்­க­ளென்று நம்­புவோம்.

துர­திர்ஷ்­ட­வ­ச­மாக தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பில் தெரி­வான தமிழ் எம்.பி. அர­சுடன் இணைந்து தன்னை வளர்த்­துக்­கொண்டார். எந்த மக்கள் எதற்­காக வாக்­க­ளித்­த­னரோ அதனைச் செய்­யாமல் தன்னை வளர்த்­துக்­கொண்டார். அப்­ப­டிப்­பட்­ட­வர்­களை எதிர்­கா­லத்தில் தெரி­வு­செய்­யாமல் மக்­க­ளுடன் நிற்­கக்­கூ­டிய தலை­வர்­களை இனங்­கண்டு பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்­புங்கள். அத­னூ­டாக தங்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளை­தீர்க்­க­மு­டியும்.

வடக்­கி­லி­ருந்து நாம் இருவரும் நேரடியாக வந்து உங்களுடைய பிரச்சினைகளை தேவை களை நேரில் கண்டறியவேண்டும் என்பதற்காக நேற்று திருகோணமலைக்கும் அம் பாறைக்கும் நாளை மட்டக்களப்பிற்கும் விஜயம் செய்கின்றோம். வடக்கு மட்டுமல்ல கிழக்கு வாழ் மக்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினை களையும் நேரடியாக கண்ணுற்று சர்வதேசத் திற்கு வெளிக்கொணர்வதே எமது நோக் கமாகும். உலகிற்கு வெளிக்கொணர்வோம். எனவே உங்களது பிரச்சினைகளை தரவுகள் ரீதியாக எமக்குத்தரவேண்டும். என்றார்.