செய்திகள்

கிழக்கு மாகாண பட்டிஜட் 34 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

இரண்டு மாதங்களாக இழுபறியில் இருந்த கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம் சகல கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த வரவு-செலவுத்திட்டத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் சமர்ப்பித்தார்.

வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 34 வாக்குகள் அளிக்கப்பட்டன. இரண்டு உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்கவில்லை. கிழக்கு மாகாண சபையில் 37 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

பட்ஜெட்டுக்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியளித்ததையடுத்தே இன்று பட்ஜெட் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.