செய்திகள்

கிழக்கு மாகாண விவகாரத்தில் தலையிடப்போவதில்லை: கூட்டமைப்பிடம் ஜனாதிபதி

கிழக்கு மாகாணத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ+க்கும் இடையில் உருவாகியிருக்கும் பிரச்சினையில் தான் தலையிடப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

கிழக்கு மாகாணத்தில் உருவாகியிருக்கும் நிலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று இரவு சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்கள்.

இதன்போது சம்பந்தன் தெரிவிதத கருத்துக்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ள நியாயத்தை தன்னால் புரிந்துகொள்ள முடிவதாகத் தெரிவித்தார். இருந்தபோதிலும் மாகாண சபைகளின் நிர்வாக விவகாரங்களில் தான் தலையிடப்போவதில்லை எனவும், சம்பந்தப்பட்ட கட்சிகளே இதற்கான தீர்வைக்கண்டு கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.