செய்திகள்

குப்பிளான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த கொடியேற்றம் ஆரம்பம்

ஐந்தாம் குரவர் எனப் போற்றப்படும் ஆறுமுகநாவலர் பெருமானின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்த சித்தாந்த பண்டிதர் மகான் காசிவாசி செந்திநாதையர் பிறந்ததால் பெருமையடைந்த யாழ்.குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

காலை 7 மணிக்கு விசேட அபிஷேக பூசைகள்,வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்குக் கொடியேற்ற உற்சவம் நடைபெற்றது.

தொடர்ந்து 12 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வேட்டைத் திருவிழாவும்,13 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு சப்பறத் திருவிழாவும்,மறுநாளான செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இரதோற்சவமும்,அடுத்தநாள் புதன்கிழமை முற்பகல் 11 மணிக்குத் தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.

மஹோற்சவக் கிரியைகளை வித்வஜோதி,ஆகமகலாசூரி,கிரியா கலாபமணி சி.கிருஸ்ணசாமிக் குருக்கள் நிகழ்த்தி வருகிறார். மஹோற்வச தினங்களில் தினசரி காலைப் பூஜை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன்,முற்பகல் 11.30 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையும் இடம்பெற்று அதனைத்தொடர்ந்து சுவாமி வீதியுலா இடம்பெற்று காலைப் பூசை பகல் 12.30 மணிக்கு நிறைவு பெறும். மாலைப் பூஜை 5.30 மணிக்கு ஆரம்பமாகி 7 மணிக்கு ஆன்மீகப் பெரியோர்களின் சமயச் சொற்பொழிவும்,7.30 மணிக்கு வசந்தமண்டபப் பூஜையும் அதனைத் தொடர்ந்து சுவாமி வீதி வலம் வரும் நிகழ்வும் இ;டம்பெற்று மாலைப் பூஜை இரவு 9.30 மணிக்கு நிறைவு பெறும்.மஹோற்சவ தினங்களில் தினசரி மதியம் அன்னதானம் நடைபெறவுள்ளது. யாழ்.நகர் நிருபர்-

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA