செய்திகள்

குப்பைகள் வீதியின் ஓரத்தில் கொட்டபடுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட தலவாக்கலை வட்டகொடை நகரத்தில் உள்ள வீடுகள்மற்றும் கடைகளில் இருந்து கழிவு பொருட்கள் அனைத்தும் வட்டகொடை பூண்டுலோயாசெல்லும் பிரதான வீதியின் ஓரத்தில் கொட்டபடுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடுஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது துர்நாற்றம் வீசப்படுவதோடு நுளம்பு தொல்லையு ஏற்பட்டுள்ளது. இங்குகொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அப்புறபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறுநுவரெலியா பிரதேச சபை அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.