செய்திகள்

குற்றச்சாட்டுகளற்ற அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுங்கள்: சந்திரகுமார்

இது வரைக்கும் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் பிரதமர் ரணில விக்கரசிங்க தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின்போது பாராளுமன்ற உறுப்பினரால் மக்களின் மேலும் பல பிரச்சினைகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

01

சுமார் 196 பேர் இதுவரைக்கும் எவ்வித குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படாமல் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவே இவர்கள் எவ்வித தாமதமின்றி விடுதலை செய்யபபடவேண்டும்.

இந்திய மற்றும் தென்னிலங்கை றோலர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கடற்றொழிலர்களின் வாழ்வாதாரம் மேலம் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. எனவே இது தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வடக்கு கட்றறொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை மனிதாபிமான முறையில் தொழிலாளிகள் என்ற வகையில் விடுதலை செய்தாலும் அவர்களின் றோலர்கள் விடுவிக்கப்பட கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரினால் தெரிவித்த போது பதிலளித்த பிரதமர் தற்போது கைப்பற்றபடும் றோலர்கள் விடுவிக்கப்படுவதில்லை என்றார்.

சுண்டிக்குளம் பிரதேசத்தில் 85 வரையான கடற்றொழில் செய்யும் குடும்பங்கள் இது வரைக்கும் மீள் குடியேற்றப்படவில்லை காரணம் கண்ணி வெடி என இரானுவம் கூறுகிறது. ஆனால் அந்தப் பிரதேசத்தில் தென்னிலங்கையில் இருந்து வந்து கடற்றொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். எனவே இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வலி வடக்கில் இரானுவத்தினரால் சுற்றுலா விடுதிகள், கோல்ப் மைதானம் என அமைக்கப்பட்டு வருகிறது இதற்கும் தேசிய பாதுகாப்புக்கும் தொடர்பில்லை எனவே அந்த பிரதேசங்களிலும் விரைவான மீள்குடியேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும்.

அத்தோடு பிரதமர் அவர்களினால் கிளிநொச்சியில் இரானுவத்தின் பயன்பாட்டில் உள்ள காணிகள் அரச காணிகள் எனக் கூறப்பட்டது ஆனால் அங்கு அப்படியல்ல பரவிபாஞ்சான்,இயக்கச்சி, கிருஸ்ணபுரம் போன்ற பிரதேசங்களில் இரானுவத்தினர் தனியார் காணிகளிலே உள்ளனர் எனவும் பாராளுமன்ற உறுப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டது.