செய்திகள்

குற்றச்சாட்டுக்களை மொழிபெயர்க்க நீதிமன்றம் உத்தரவு

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்பு நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது.

இன்றையை விசாரணையின்போது ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் குமார், அரசு தரப்பில் பவானி சிங் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இதைத் தொடர்ந்து, சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வரும் 13ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநில மொழி மாற்ற துறை இயக்குனருக்கு நீதிபதி உத்தரவிட்டதோடு, இன்றும் விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.