செய்திகள்

குற்றச்செயல்களைத் தடுக்க பொலிஸ் அதிகாரத்தை வழங்கவேண்டும்; சிறிதரன் எம்.பி.

வடக்கில் நடைபெறும், கொலை, பாலியல் வல்லுறவு, துஷ்பிரயோகம், போதைப் பொருள் பாவனை மற்றும் கசிப்பு விற்பனை போன்ற குற்றங்களுடன் தொடர்புடையோருக்கு பொலிஸார் உடந்தையாக இருப்பதே இவ்வாறான குற்றச்செயல்கள் அதிகரிக்கக் காரணமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம் சாட்டினார்.

இதனைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் மாகாண சபைக்கு அரசாங்கம் பொலிஸ் அதிகாரத்தை உடனடியாக வழங்க வேண்டுமெனக் கோரியதுடன் குற்றச்செயல், போதைப்பொருள் பாவனையைத் தடுக்க மக்களை விழிப்பூட்டும் அதே நேரம் ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்போவதாகவும் குறிப்பிட்டார்