செய்திகள்

குற்றச்செயல்கள் பற்றி அறிவிப்பதற்கு தனித் தொலைபேசி இலக்கம்

குற்றச் செயல்கள் தொடர்பில் அறிவிக்க யாழ்.மாவட்ட செயலகத்திற்கென தனித் தொலைபேசி இலக்கம் வழங்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் –

எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலகத்தில் கல்வி அமைச்சின் செயலாளர், அதிகாரிகள், வலய மற்றும் கல்வி பணிப்பாளர்களுடன் மாணவர் மத்தியில் காணப்படும் போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம் என்பவற்றை தடுப்பது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

சில பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை காணப்பட்டாலும் அதிபர்கள் உரிய நடவடிக்ககை எடுப்பதில்லை. அவர்களுக்கு அறிவித்தலும் ‘எங்கள் மாணவர்கள் அப்படியிலை’ எனக் கூறுகிறார்கள்.

மாணவர்கள் மத்தியில் காணப்படும் போதைப் பொருள் பாவைனயைத் தடுக்க வேண்டும் என்ற சமூகப் பொறுப்பு எல்லோர் மத்தியிலும் காணப்பட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்தே கட்டுப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.