செய்திகள்

குற்றவாளிகளை கண்டுபிடித்த பொலிஸ் மோப்ப நாய் விருது வழங்கி கௌரவிப்பு

கொலை , கொள்ளை உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக பெரும் பங்களிப்பை செய்து வரும் கிறேறோ எனப்படும் பொலிஸ் மோப்ப நாய் பொலிஸ் திணைக்களத்தினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மோப்ப நாயொன்று விருது வழங்கி கௌரவிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவேயாகும்.
500 குற்றச் செயல்கள் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள குறித்த மோப்ப நாய் 12 கொலை சம்பவங்கள் உட்பட 250 சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகளை காட்டிக் கொடுத்துள்ளது.
பாணந்துறையில் பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வென்றில் இந்த பொலிஸ் நாய் கௌரவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விருதினை அதனை பராமறிக்கும் பொலிஸ் கான்ஸ்டபில் சுமிந்த பெற்றுக்கொண்டுள்ளார்.