செய்திகள்

குற்றவாளிகளை காப்பாற்றவே மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வர துடிக்கின்றார் : அனுர குமார

பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களை காப்பாற்றுவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் அரசியலுக்கு வர முயற்சிப்பதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை அனுராதபுரம் பகுதியில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன. அவ்வாறானவர்களை காப்பாற்றவே அவர் மீண்டும் அரசியலுக்கு வர முயற்சிக்கின்றார். கடந்த  காலங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். பல்வேறு ஊழல் மோசடிகளுடன் அவரின் குடும்பத்தவர்களும் தொடர்புபட்டுள்ளனர்.இது தொடரபாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும். என அனுரகுமார தெரிவித்துள்ளார்.