செய்திகள்

குளவிகளின் தாக்குதலால் 15 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு (படங்கள்)

நுவெரலியா மாவட்டத்தில் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் போட்ரி தோட்டத்தில் 01.06.2015 அன்று காலை 9.30 மணியளவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.

தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருக்கும் போது கழுகு ஒன்று மரத்தில் இருந்த குளவி கூட்டை கலைத்ததினால் குளவி கூடு கலைந்து கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் மீது தாக்கியுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான 15 பேரில் 5 பேர் குறித்த தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் ஏனைய 10 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குளவி தாக்குதலுக்கு இலக்கானவர்களில் 13 பெண்களும் 2 ஆணும் அடங்குகின்றமை குறிப்பிடதக்கது.

DSC09108

DSC09110

DSC09111

DSC09113

DSC09115

DSC09119

DSC09121

DSC09123