செய்திகள்

குளவி தாக்கியதில் 11 பேர் பாதிப்பு (வீடியோ)

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன் எரோல் தோட்டத்தில் இன்று காலை 10 மணியளவில் தேயிலை செடிக்கு உரம் போட்டுக் கொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.

தேயிலை செடிக்கு உரம் போட்டுக்கொண்டிரும் போது தேயிலை அடிப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு இவ்வாறு தங்களை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட

தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான 11 பேரில் 2 பேர் குறித்த தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் ஏனைய 9 பேர் டிக்கோயா கிளங்கன்
வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

[youtube url=” https://www.youtube.com/watch?v=kDiRTuyAsxY&feature=youtu.be” width=”500″ height=”300″]