செய்திகள்

குளியாப்பிட்டிய பிரதேசம் இன்று நள்ளிரவு முதல் முடக்கப்படுகின்றது

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தை இன்று நள்ளிரவு முதல் முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அந்தப் பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வரும் நிலையிலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக

இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த மாவட்டத்தில் பீசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. -(3)