செய்திகள்

கூட்டமைப்பின் இணைப்புக்குழு விரைவில் கூடும்:மாவை சேனாதிராஜா.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுப் பொறுப்பை வலியுறுத்தும் வகையில் கூட்டமைப்பு நாடாளுமன்ற,மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை இணைத்து இணைப்புக் குழுக் கூட்டமொன்று விரைவில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தை எதிர்வரும் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் வவுனியா அல்லது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.குறித்த காலத்தில் வடக்கு முதலமைச்சர் வெளிநாடு செல்லவுள்ளதால் பிறிதொரு திகதியில் இக் கூட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான இணைப்புக் குழுவொன்றை அமைக்க முன்னர் பல தடவைகள் முயன்றும் அது முடியாமல் போனது.இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் எம்.பிக்கள் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இக் கூட்டத்தை விரைவாக நடாத்த உத்தேசித்துள்ளோம் எனவும் அவர் மேலும் கூறினார்.