செய்திகள்

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம்

அரசியல் கைதிகள் பிரச்சினையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனுக்கும் சுரேன் ராகவனுக்கும் இடையில் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சூடான கருத்து மோதல் இடம்பெற்றது.தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் சுமந்திரன் உரையாற்றிய சுமந்திரன், ஆளும் கட்சியில் இருந்து கொண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய சுரேன் ராகவன் எதனையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

அதேபோன்று, நாடாளுமன்றில் நாயைப் போன்று குரைக்க வேண்டாம் என சுரேன் ராகவனை சுமந்திரன் கோரியிருந்தார். அரசாங்கத்தின் அடிவருடியாக ராகவன் செயற்பட்டு வருவதாகவும் நலன்களுக்காக அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சரியென கூறி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.அத்தோடு கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

2015 மற்றும் 2019 க்கு இடையில் 100 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுவிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.இதேவேளை, 15 ஆண்டுகள் நாடாளுமன்றில் இருந்து தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றீர்கள் என சுரேன் ராகவன், சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.(15)