செய்திகள்

கூட்டமைப்பு எம்.பி அப்பாத்துறை விநாயகமூர்த்தி விபத்தில் காயம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பியான அப்பாத்துறை விநாயகமூர்த்தி பயணித்த வாகனம் மாரவில பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த விபத்தில் காயமடைந்த எம்.பி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் பயணித்த காரும் எதிரே பயணித்த வானொன்றும் மோதியதாலே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது.