செய்திகள்

கூட்டமைப்பை அழிக்க சதி இடம்பெறுகின்றது: வடக்கு சுகாதார அமைச்சர்

தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தமிழரசுக்கட்சியையும் அழிப்பதற்கு பல தரப்பாலும் சதிதிட்டங்கள் இடம்பெற்றுவருவதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.

தந்தை செல்வாவின் 117 ஆவது ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“30 வருட யுத்தம் இடம்பெற்ற மாகாணமாக எமது மாகாணம் உள்ளமையால் பல அழிவுகள் இடம்பெற்றுள்ளது. பலர் தமது இன்னுயிர்களை இந்த தாயகத்திற்காக ஈந்திருக்கின்றார்கள். பலர் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளார்கள். பொருந்தொகையான சொத்து அழிக்கப்பட்டுள்ளது. அத்துடுடன் எமது கலை கலாசாரம் பண்பாடு அழிக்கப்பட்டுள்ளது. அதனை அழிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில்தான் தான் வடக்கு மாகாணத்தில் போருக்கு பின்னரான காலப்பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்னிறோம்.

எங்களுடைய வடக்கு மாகாணத்தில் எங்களுடைய மக்கள் அடிப்படை தேவைகளைத்தானும் பூர்த்தி செய்து வாழ்வதற்கு கூட பலத்த சிரமங்களுக்கு மத்தியில் உள்ளார்கள். எமது வடக்கு மாகாணசபை ஒரு வருடமும் 5 மாதமுமாக இயங்கி கொண்டிருக்கின்றபோதிலும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தான் ஓரளவு இய்ங்க கூடியதாக உள்ளது.

ஆகவே வடக்கு மாகாணத்தில் வாழுகின்ற துன்பப்பட்ட துயரப்பட்ட மக்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துவதற்கு எம்மோடு சேர்ந்து தமிழரசுக் கட்சியும் அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும்.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் அதன் அங்கமாக உள்ள தமிழரசுக் கட்சியையும் அழிப்பதற்குரிய பல வேலைத்திட்டங்கள் பலராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எம்மை பிரித்தாழும் தந்திரத்துடன்தான் எம்மை பல துண்டுகளாக கூறு போட திட்டங்கள் நடைபெற்றமையியானலேயே தமிழர்கள் ஒன்றாக நின்று போராடிய காலம் குறைவானதாக இருக்கிறது.

எமது மக்களை பல கூறுகளாக பிரிப்பதன் மூலம் தமது எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு ஆளும் தரப்பினர் அன்றில் இருந்து இன்று வரை செயற்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை கூறுபோடுவதன் மூலம் யுத்த இறுதி நாட்களில் கெல்லப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட எங்களுடைய மக்களின் பிரச்சனைகளை இனம்கண்டு அற்றை முன்னெடுத்து செல்வதை கூட அழிப்பதற்கு பல்வெறான சதித்திட்டங்கள் இடம்பெறுகின்றது.

இதற்கு உள்நாட்டில் உள்ளவர்களும் வெளிநாட்டில் உள்ளவர்களும் அரச தரப்பினரும் குறிப்பாக இராணுவ மற்றும் ஏனைய படைத்தரப்பை சேர்ந்தவர்களும் எமது கட்சியையும் மக்களையும் கூறுபோடும் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்” என்று தெரிவித்தார்.