செய்திகள்

கூட்டமைப்பை பதிவு செய்யவும் பொது வேலைத்திட்டத்துக்கும் நடவடிக்கை எடுக்க: ஈ.பி.ஆர்.எல்.எப். வலியுறுத்து

தமிழ் தேசிய கூட்டமைப்பு பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவேண்டும் என கோரியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எப்.),தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவு செய்வதற்கான உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் வலிறுத்தியுள்ளது.

இன்று மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழு மத்திய குழுக்கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ்த்தேசியத்தின் நலன் கருதி ஒன்றிணைக்கப்பட்ட தமிழ்த்கட்சிகளின் கூட்டமைப்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இவ்வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள கூட்டுத்தலைமைகள் கூடித் தீர்மானங்களை தீர்மானித்து அறிவிப்பதே சனநாயகமாகும். தமிழ்த் தேசியத்தின் நலனுக்கும்,அதன் உரிமைகள் தொடர்பான போராட்டப்பாதைக்கும், அதன் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும், பங்கம் விளைவிப்பதாகவே அமையும்.

இதேவேளை,கிழக்குமாகாணசபையில் பலமான ஆட்சியாளராகமாறுவதற்கானதும் முதலமைச்சரைப் பெறுவதற்கானதும்,அதிகாரமுள்ள அமைச்சைப் பெறுவதற்குமான வாய்புகள் இருந்தும் அதைத் தவறவிட்டுள்ளோம். இந்தப் பொறுப்பை இந்தத் தவறைவிட்டவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். இனிமேல் இந்த தவறைவிட்டுவிடக் கூடாது. இதேவேளை இன்றைய சூழ்நிலையில் நாம் பலமாக இருக்கும் போது முஸ்லிம் காங்கிரசால் ஏமாற்றப்பட்டுவிட்டோம் எனும் ஐயப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் இருந்துவருகின்றது.
இந்தவகையில் மாவட்டரீதியான பொதுவான வேலைகளைமுன்னெடுப்பதற்கும் கிழக்குமாகாணசபையில் கடந்தகாலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தடுத்து நிறுத்தவும்,திறமை அடிப்படையிலும் விகிதாசாரமுறையிலும் நியமனங்களை வழங்கவும், அதிகாரப்பங்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் விகிதாசார அடிப்படையில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கவும்.

இன ஐக்கியத்தை உருவாக்குவதற்கும் எமது கட்சி முழுமையான ஒத்துழைப்பைவழங்கும்
மேலும் கூட்டமைப்பிலுள்ள ஒருகட்சி கூட்டு முடிவை எடுக்காமல் தனித்துச் செயற்பட்டதன் காரணமா கஏற்பட்டுள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டியமைக்காக தமிழ்த்;தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான கௌரவ சுரேஸ் பிரேமச் சந்திரன் ஈழமக்கள் புரச்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் அவர்கள் மீது கடந்தவாரம் குறித்த ஒருகட்சியின் மத்திய குழு கூட்டத்தில் சுமத்தப்பட்ட கண்டனத் தீர்மானமானது இன்றையச் சூழலில் எமக்குமிகுந்தமனவேதனையைஅளிக்கின்றது.

அதேவேளை கிழக்குமாகாண ஆட்சியமைப்பு தொடர்பாகவும்,அமைச்சுப் பதவிகள் பகிர்தளிக்கப்பட்டமுறைமை தொடர்பாகவும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில்; அங்கம் வகிக்கும் ஒரு கட்சி சனநாயக வரன்முறைகளுக்கு முரணாக நடந்துகொண்டமை தொடர்பாக நாம் மிகுந்த மனவேதனைஅடைகின்றோம்.

இந் நிலைமைகள் தமிழ்த் தேசியத்தின் நலனுக்கும்,அதன் உரிமைகள் தொடர்பான போராட்டப் பாதைக்கும்,அதன் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும்,பங்கம் விளைவிப்பதாகவேஅமையும்.
எனவேதமிழ்த் தேசியத்தின் நலன் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பின் முன்னெடுத்துவரும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுதொடர்பான இராஜதந்திரநடவடிக்கைகளையும், தமிழர்களின் உரிமைகள்,அபிலாசைகள், இயல்புவாழ்க்கை ,புணர்வாழ்வுநடவடிக்கைகள், அதிகாரப்பங்கீ டுமுதலான கருத் திட்டங்களுக்கும் உணர்வுபூர்வமாகவும், இதய சுத்தியோடும், மனஉறுதியோடும் நாம் எமதுவேலைத் திட்டங்களை காலத்தின் தேவை அறிந்து கூட்டுத் தலைமைகளால் மட்டும் உருவாக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். இதுவே இன்று நம்முன்னுள்ள கடமையாகும்.

இந்தவகையில் தமிழ்த்தேசியத்தின் இலட்சியத்தை என்றுமே வெல்லப்பட முடியாத வரலாற்றுச் சூழ்நிலையை ஏற்படுத்திவிடக் கூடாது. இதன் காரணமாக தமிழ்த் தேசியத்தைப் பிளவுபடுத்திச் சின்னாபின்னாமாக்கித் தமிழ்த்தேசியத்தின் சனநாயக அரசியல் இருப்பையும், உரிமையையும்,குழிதோண்டிப் புதைத்துவிடும் செயல் நிலைவாத நிலைப்பாட்டையே இந் pலைமைகள் தோற்றுவிக்கும்.

எனவே தமிழ்த்தேசியத்தின் வலிமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல,தமிழ்த் தேசியக் கட்களின் ஐக்கியம் தொடர்ந்து பேணப்பட, உட்கட்சி முரன்பாடுகளையும் கருத்து மோதல்களையும் கூடுமான வரைதவிர்த்துக் கொள்ள, தமிழ்மக்கள் கட்சி ரீதியாகபிரிந்து நின்று தமிழ்ப்; பிரதிநிதித்துவங்களை கிழக்கு மண்ணில் இழக்காது இருக்க கூட்டுத்தலைமை பொதுவான வேலைத்திட்டத்தை வகுத்து மாவட்ட ரீதியாக வெளியிலுள்ள நல்லசக்திகளை இனம் கண்டு அவர்களை உள்வாங்கி கிராம ரீதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுவானவேலைத்திட்டத்தை முன்னெடுப்பதோடு, தமிழ்த் தேசியக் கூட்டைமைப்பு உடனடியாக அரசியற்கட்சியாகப் பதிவுசெய்யப்படல் வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழு தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.