செய்திகள்

கேகாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி

கேகாலை ரன்வல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரிகள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து கேகாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வண்டியொன்றும் எதிரே வந்த லொரியொன்றும் நேருக்கு நேர் மோதியதாலே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது வீதியோரத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்த இருவர் மீது டிப்பர் மோதியுள்ளதாகவும் இதில் பாதசாரிகள் இருவரும் லொரியின் சாரதியும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை டிப்பர் வாகன சாரதியும், லொரியின் உதவியாளரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.