செய்திகள்

கே.பி.க்கும் விஷேட பாதுகாப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய கே.பி. என்ற குமரன் பத்மநாதனுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்புக்கு தேவையான குண்டு துளைக்காத வாகனங்கள் உட்பட மூன்று பென்ஸ் கார்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி அதிகாரத்தை விட்டு செல்லும் போது அவற்றை எடுத்துச் சென்றார் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.