செய்திகள்

கைதான 130பேரையும் அனுராதபுரம் சிறையில் பார்வையிட்ட மாவை, சுமந்திரன்

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் கொலையை கண்­டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி யாழ். நீதிமன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச் சாலையில் விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளவர்களை தமிழ் தேசிய கூட்­ட­ மைப்பினர் நேற்று நேரில் சென்று பார்வை யிட்டுள்ளனர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் மாண­வர் கள் உள்­ள­டங்­கி­யுள்­ள­தா­கவும் அவர்­களை விடு­விப்­ப­தற்­கான சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்­ள­தா­கவும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் படு­ கொ­லையை கண்­டித்து இடம் பெற்ற ஆர்ப் பாட்டத்தின் போது நீதிமன்ற கட்டிடத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டின் பேரில் 130 பேர் பொலி­ஸா­ரினால் கைது­செய்­யப்­பட்டு அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந் நிலையில் நேற்று இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ ராஜா மற்றும் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகி யோர் அவர்­களை நேரில் சந்­தித்துப் பேசி­யுள்­ள னர். நேற்று காலை அனு­ரா­த­புரம் சிறை ச்­சா­லைக்கு சென்று விளக்க மறியலில் வைக் கப்பட்டுள்ள 130 பேரையும் பார்­வை­யிட்ட பின்னர் அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் கேச­ரிக்கு தெரி­விக்­கையில்,

வித்­தி­யாவின் படு­கொ­லையை கண்­டி த்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் யாழ். நீதி மன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்­திய குற்­றச்­சாட்டில் 130 பேர் கைது செய்­யப்­ பட்­டுள்­ளனர். இவர்­களை சந்­திக்க சென்­ற­போதே இவர்­களில் 36 பேர் மாண­வர்கள் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது. அதிலும் இந்த மாண­வர்­களில் 30பேர் 20வ­ய­துக்கும் குறை­வா­ன­வர்­க­ளாவர். ஆகவே இவர்­களை விடு­விக்­க­வேண்­டிய பொறுப்பு எமக்கு உள்­ளது. மேலும் கைது செய்­யப்­பட்டவர்கள். தொடர்­பி­லான வழக்கு எதிர்­வரும் 1ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் திக­தி­களில் விசா­ர­ணைக்கு வரு­கின்­றது. எனவே இதன்­போது முதற்­கட்­ட­மாக கைது செய்­யப்­பட்­டுள்ள மாண­வர்­களை விடு­விக்கும் நோக்கில் இம் மாண­வர் கள் சார்பில் நான் ஆஜ­ரா­க­வுள்ளேன்.

இந்த மாண­வர்­களின் நிலை­மையை எடுத்­துக்­கூறி அவர்­களை விடு­விக்கக் கோர­வுள் ளேன். கைது செய்­யப்­பட்­டுள்ள நபர்­களை விடு­விக்க கோர­மு­டி­யா­வி­டினும் விசேட கார­ணங்­களை எடுத்துக் கூறி அவர்­களை விடு­விக்க முடியும். எனவே இந்த மாண­வ ர்கள் விட­யத்­திலும் அவர்­களின் கல்வி நிலை­மையை எடுத்துக் கூறி அவர்­களை விடு­விக்­கு­மாறு நீதி­மன்­றத் தில் கோர­வுள் ளேன். அதேபோல் இந்த சம் ­ப­வத்­துடன் தொடர்பு இல்­லாத பலர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். சம்­ப­வத்தை வேடிக்கை பார் த்த நபர்கள், அப்பகுதியில் பயணி த்த வர் கள் என பலர் பொலிஸாரினால் கைது செய் யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களும் அவ் வாறே கைது செயயப்பட்டிருக்க வேண் டும். அத்தோடு ஏனைய மக்களையும் விடு விக்கவேண்டிய கடமை எமக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.