செய்திகள்

கை கழுவும் தொற்று நீக்கி திரவத்தை அருந்திய வெலிக்கடை சிறைக் கைதிகள் இருவர் மரணம்!

கொழும்பு விளக்க மறியல் சிறையில் தொற்று நீக்கி திரவம் அருந்திய இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் திரவத்தை அருந்திய மேலும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானிய பிரஜைகள் இருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சிறைக் கைதிகளுக்கென வழங்கப்பட்டிருந்த கைகழுவும் திரவத்தையே அவர்கள் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திரவத்தில் தண்ணீரை கலந்து அதனை அருந்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.