செய்திகள்

”கை” சின்னத்தில்போட்டியிடுவதே சிறந்தது : இடதுசாரிகளின் கேந்திர நிலையம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திர கட்சியின் கீழ் போட்டியிடுவதற்கு இடதுசாரிகளின் கேந்திர நிலையம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, சுதந்திர கட்சி ‘கை’ சின்னத்தில் போட்டியிடுவது மிகவும் உகந்ததாக இருக்கும் என அதன் பொது செயலாளர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது லங்கா சமசமாஜ கட்சி மற்றும் இலங்கை கம்மியுனிச கட்சி ஆகியவற்றிலிருந்து விலகிச் சென்றவர்களே இடதுசாரிகளின் கேந்திரத்தை ஸ்தாபித்துள்ளனர்.
20 வது திருத்தத்தை துரிதமாக நிறைவேற்ற முடியாத பட்சத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து விடுமாறு கோரவுள்ளதாக கேந்திரத்தின் பொது செயலாளர் லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் 18 ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து இந்த கோரிக்கையை விடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.