செய்திகள்

கொக்கட்டிச்சோலையில் யானை தாக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை யானை தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 5.30மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தாந்தாமலை,நெல்லிக்காடு பகுதியை சேர்ந்த ச.இராஜதுரை(60வயது)என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் வீட்டில் இருந்து காலைக்கடன் கழிப்பதற்காக வெளியில் சென்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

பல காலமாக யானையின் தாக்குதல்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேச மக்கள் பெரும் இழப்புகளை சந்தித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_0007 IMG_0010 IMG_0013 IMG_0017