செய்திகள்

கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் ரயில் மோதி ஒருவர் பலி

யாழ்.கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் இன்று 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணியளவில் இடம்பெற்ற ரயில்விபத்தில் தூக்கி வீசப்பட்ட நபர் உடல் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,யாழ்.பிரதான புகையிரத நிலையத்திலிருந்து இன்று காலை கோண்டாவில் நோக்கிப் புறப்பட்ட ரயிலின் முன்னால் தண்டவாளத்தைக் கடந்து சென்ற குறித்தநபரை மோதித் தள்ளியது.இதன்காரணமாகத் தூக்கி வீசப்பட்ட நபர் துடி துடித்துப் பலியானார்.

சம்பவத்தில் சிக்கி அதேயிடத்தைச் சேர்ந்த வெள்ளைத்தம்பி என அழைக்கப்படும் ஜெ.ஜெயச்சந்திரன்(வயது-55) என்பவரே உயிரிழந்தவாராவார்.குறித்த நபர் சித்த சுவாதீனமற்றவர் என்பதுடன் கேட்கும் திறனற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி நபர் ரயில் விபத்தில் சிக்கப் போவதை உணர்ந்த அப் பகுதியைச் சேர்ந்த மற்றொருவர் அவரைக் காப்பாற்ற முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சும்பவம் தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
யாழ்.நகர் நிருபர்-

kondavil-accident5