செய்திகள்

கொடிகாமம் வடக்கு, மத்திய கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று காலை விடுவிக்கப்பட்டன

அண்மையில் கொடிகாமம் சந்தை உள்ளிட்ட வர்த்தக தொகுதியில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்திய ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் கடந்த மே 4 ஆம் திகதி, இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்டன.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொடிகாமம் வடக்கு, மத்திய கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை விடுவிக்கப்பட்டன.(15)