செய்திகள்

கொடுக்கல் வாங்கல் சிக்கலில் இலங்கைத் தாதி கொலை!

குவைத்தில் தொழில் புரிந்த இலங்கை தாதி ஒருவரை இந்திய பிரஜை ஒருவர் கொலை செய்துள்ளார்.

சந்தேக நபருக்கும் இலங்கை தாதிக்கும் இடையில் இருந்த கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இச்சம்பவத்தில் 31 வயதான தாதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணிக்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மறைந்திருந்த இந்திய பிரஜை, தாதியின் முதுகில் இரு முறை கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார். இதன் காரணமாக இந்தத் தாரதி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குவைத் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.