செய்திகள்

கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவர்

பதிவு காலம் முடிந்து கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தெரிவித்துள்ளார்.

பதிவு காலம் முடிந்தும் சுமார் 4000 பேர்வரை கொரியாவில் தங்கியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்று செல்லவிருந்த சிலரை நேற்று வெள்ளிக்கிழமை அமைச்சில் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பதிவு காலம் முடிந்தும் இலங்கையர்கள் கொரியாவில் தங்கியிருப்பதால் புதிதாக வேலை வாய்ப்பு பெற்றுச் செல்ல இருப்போர் காலதாமதத்தை எதிர்நோக்குவதாக தலமா அத்துகொரல குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளாகவும் அதற்கு தகுதி உடையவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தலதா அத்துகொரல தெரிவித்தார்.