செய்திகள்

கொரோனாவால் நேற்று 65 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொரோனா தொற்றால் நேற்று 65 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2769 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை நாட்டில் இன்று மேலும் 1,358 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 245,271 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 211,186 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
-(3)