செய்திகள்

கொரோனாவால் பாதிப்புற்று வீட்டிலிருப்போர் உடனடியாக 1906 தொலை பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இது வரை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படாத கொரோனா தொற்றாளர்களை கொண்டு செல்வதற்காக 1906 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

1906 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தில் சுகாதார அமைச்சைத் தொடர்பு கொண்டு வைத்தியசாலைக்கு அல்லது சிகிச்சை மத்தியநிலையங்களுக்கு அழைத்துச் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் இன்னமும் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படாமல் வீட்டிலேயே தங்கி யிருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15)