செய்திகள்

கொரோனாவை ஒற்றுமையால் வீழ்த்திய ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல்

ஊரடங்கின் மூலம் ஒற்றுமையை நிலைநாட்டி, தனது செயல்பாடுகள் மூலம் உலக தலைவர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளார் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல்.ஏஞ்சலா மெர்கெல் கொரோனா தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மாகாண கவர்னர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே முடிவு எடுத்தார்.நோய் தடுப்பு பணியில் மாகாண கவர்னர்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்தார். அதுவே மெர்கலின் நிர்வாகத்திறமைக்கு சரியான எடுத்துகாட்டு. நாட்டை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்பதை தனது ஒவ்வொரு பேட்டியிலும் மக்களிடம் உணர்த்தினார்.

எதிர்கட்சிகளை சேர்ந்த மாகாண கவர்னர்களும் மெர்கலின் பேச்சை ஏற்றுக்கொண்டு செயலாற்றினர். அமெரிக்காவை போலவே ஜெர்மனியும் விரைவில் அதிபர் தேர்தலை சந்திக்க உள்ளது. ஆனாலும் தேர்தலையும், தங்களுக்குள்ள வேறுபாடுகளையும் தள்ளிவைத்து விட்டு அங்குள்ள அரசியல் தலைவர்கள் சேவையாற்றினர்.gallerye_004735860_2523594

மத்திய, மாகாண அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் காரணமாக, நாடு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும் உயிரிழப்புகள் குறைந்துவிட்டன. ஜெர்மனியில் கொரோனாவால் ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்கள் எண்ணிக்கை 4,500க்குள் தான். 85 ஆயிரத்திற்கும் மேல் சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளனர். இதெல்லாம் எவ்வாறு சாத்தியமானது என்று கேட்டால் மத்திய அரசுடன் மாகாண அரசுகள் இணைந்து செயலாற்றியதுதான் காரணம் எனப்படுகிறது.(15)