செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் -ஹட்டன் பிரதான தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹற்றன் பிரதான தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.குறித்த தபால் நிலையத்தில் பணிப்புரிந்த 2 ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்த இரண்டு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொவிட் தொற்று உறுதியானதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார அதிகாரி ராமய்யா பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.இதேவேளை குறித்த தபால் நிலையத்தில் பணிப்புரிந்த 17 ஊழியர்களையும் ரெபிட் எண்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.(15)