செய்திகள்

கொரோனா தொற்று – இன்று முதல் சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட பின்னர் பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஒரு சிறப்பு சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது.சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதாகக் கண்டறியப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குறித்த சுற்றறிக்கையின் கீழ், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.கடைகள், பொது போக்குவரத்து மற்றும் ஏனைய இடங்களை ஆய்வு செய்ய பொலிஸார் பணியில் அமர்த்தப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சகம் பிறப்பித்த சுகாதார வழிகாட்டுதல்கள் கடுமையாக மீறப்படுவதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.

அனேகமானவர்கள் முகக்கவசம் இல்லாமல் நடமாடுகின்றனர் – சமூகவிலக்கலை கடைப்பிடிப்பதில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.ஹோட்டல்களும் ஏனைய நிறுவனங்கள் ஸ்தாபனங்களும் இந்த விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இதன் விளைவாகவே பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க சிறப்பு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(15)