செய்திகள்

கொரோனா பரவ காரணமான வூஹானில் 76 நாள் ஊரடங்கு தளர்வு

வூஹானில் அமல்படுத்தப்பட்ட 76 நாள் ஊரடங்கு தளர்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த, 2019, டிசம்பரில், வூஹான் நகரில் தான், கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியப் பட்டதாக, சீனா அதிகாரபூர்வமாக அறிவித்தது. அங்கிருந்து தற்போது உலகம் முழுவதும் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது.இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலக அளவில் இதுவரை 14 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரசின் வீரியத்தை உணர்ந்து ஜனவரி மாதத்தில் வூஹான் நகரில் ஊரடங்கை அமல்படுத்தியது.

வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக அந்நகரம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு சுமார் 1 கோடியே 10 லட்சம் மக்கள் தனிமைபடுத்தப்பட்டனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டதன் காரணமாக வூஹான் நகரில் இருந்து சீனாவின் பிற நகரங்களுக்கு வைரஸ் பரவும் வேகம் வெகுவாக குறைந்தது.gallerye_052325208_2517338

தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. மேலும், புதிதாக வைரஸ் பரவவும் இல்லை. இதனால் அங்கு நிலைமை சீரடைந்து ஹூபேய் மாகாணம் வூஹானில் விதிக்கப்பட்டிருந்த 76 நாள் ஊரடங்கு உத்தரவை சீன அரசு நேற்று தளர்த்தியது. இதையடுத்து அங்கு ரயில் போக்குவரத்து துவங்கியது.(15)