செய்திகள்

கொலையாளிகளுக்காக சட்டத்தரணிகள் ஆஜராகாதீர்கள்! மாணவிகள் அமைதியாகப் போராட்டம் (படங்கள்)

வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவை சேர்ந்த மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய கொலையாளிகளுக்கு சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராகாதீர்கள் என வலியுறுத்தியும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.

இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக கொரப்பத்தான வீதியில் பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கொரப்பத்தான் வீதியூடாக ஊர்வலமாகவும் சென்று பாடசாலையை சென்றடைந்திருந்தனர்.

இதன்போது சட்டத்தரணிகள் கொலையாளிகளுக்காக வாதிடக்கூடாது, வித்தியா ஒரு ஊடகவியல் மாணவி, வித்தியாவின் கொலைக்கு நீதி வேண்டும், போதைவஸ்து பிரயோகத்தை தடை செய், எம் சமூகமே காத்திருந்தது போதும் பெண்கள் இனத்தை பாதுகாக்க எழுச்சி கொள் போன்ற வாசகங்கள் எழுத்தி பாதாதைகளை மாணவிகள் தாங்கியிருந்தனர்.

இப் போராட்டத்தில் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

DSC04388

DSC04397

DSC04402