செய்திகள்

கொல்கத்தா பரபரப்பு வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதியது. நாணயசுழற்சியில்வென்ற பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 183 ரன்கள் குவித்தது.

184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் உத்தப்பா காம்பீர் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 4 ஆவது ஓவரில் 16 ரன்னுடன் உத்தப்பா ஆட்டமிழக்க பாண்டே காம்பீருடன் ஜோடி சேர்ந்தார். 22 ஓட்டங்கள் எடுத்த பாண்டே ஆவது ஓவரில் வெளியேற அடுத்த ஓவரிலேயே 24 ஓட்டங்களுடன் காம்பீரும் வெளியேறினார்.

212919

அடுத்து வந்த யாதவும் வந்த வேகத்தில் வெளியேற கொல்கத்தா ரசிகர்கள் உற்சாகமிழந்தனர். 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரசலும் பதானும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். பதான் நிதானமாக ஆட ரசல் அதிரடியாக ஆடினார். 20 பந்துகளில் 51 ஓட்டங்களை எடுத்த ரசல் படேல் பந்தில் ஆட்டமிழந்த போது 19 பந்துகளில் 26 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் 4 விக்கெட் மட்டுமே கைவசம் இருந்தது.

 

அடுத்து போத்தா ரன் அவுட்டாக கொல்கத்தா அணியின் வெற்றியும் தோல்வியும் சாவ்லா ஹாக் ஜோடியின் கையில் வந்தது. கடைசி 2 ஓவரும் பரபரப்பானதாகவே காணப்பட்டது. கடைசி ஓவரில் 8 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் 2 வது பந்தில் ஹாக் தேவையில்லாமல் ஓடி ரன் அவுட்டாக 4 பந்தில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை காணப்பட்டது. 3 வது பந்தில் சாவ்லா சிக்ஸ் அடிக்க மைதானமே அலறியது. அடுத்த பந்திலேயே சாவ்லா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நரேன் ஓரு ஓட்டத்தினை பெற வெற்றி பெற்றது கொல்கத்தா.
முன்னதாக முதலில் பஞ்சாப் துடுப்பெடுத்தாடிய வேளை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர்கள் முரளி விஜய் (28)இ வோரா (39) இருவரும் சுனில் நரைன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர். அதன்பின்னர் விர்திமான் சகா-மேக்ஸ்வெல் ஜோடியும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்ய அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 22 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்தார். சகா 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரின் விக்கெட்டையும் நரைன் கைப்பற்றினார்.

இதேபோல் டேவிட் மில்லரும் தன் பங்கிற்கு பவுண்டரி

சிக்சர் என பந்துகளை பறக்க விட்டார். இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை எடுத்தது. கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.