செய்திகள்

கொழும்பில் அவசர அவசரமாக மக்கள் பொருட்கள் கொள்வனவு

கொழும்பின் பல பகுதிகளிலும் இன்று மாலைவேளையில் மக்கள் முந்தியடித்துக்கொண்டு அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகிறது.

தேர்தலின் பின்ன ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருமோ, வேறு அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற அச்சநிலை காரணமாகவே மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இதனால் கொழும்பு புறக்கோட்டைப் பகுதி கடைவீதிகளில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளது. வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை, மட்டக்குளி, கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளிலுள்ள சிறுபான்மையின மக்கள் பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.