செய்திகள்

கொழும்பில் இருந்து வெளியேருவோரிடம் கொரோனா பரிசோதனை!

தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வோரிடம் கொரோனா பரிசோதனை நடத்தும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் இருந்து வெளியேறும் இடங்களில் பயணிகளிடம் எழுந்தமானமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுகின்றது என்று அவர் கூறியுள்ளார்.

உடனடியாக முடிவுகளை அறிந்துகொள்ளக் கூடிய வகையில், என்டிஜன் உபகரணத்தின் ஊடாக இந்தப் பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும், ஆனால் அந்தப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படாது என்றும் சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பரிசோதனைகள் நடத்தப்படும் இடங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடும் போது, அந்தப் பாதை ஊடாக பயணிக்காது வேறு பாதை ஊடாக அவர்கள் செல்லக் கூடுமெனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதும், தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் அந்த எண்ணிக்கை உயர்வடையக் கூடுமென சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-(3)