செய்திகள்

கொழும்பில் சிக்கியிருப்போரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து மேல் மாகாணத்தில் கொழும்பு உள்ளிட்ட நகர்பகுதிகளில் சிக்கியிருக்கும் பல்வேறு பணிகளுக்காக கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருநடதவர்களை மீண்டும் அவர்களின் ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண ஆளுனரின் கோரிக்கைக்கமைய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி அவர்களை தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட முறைமைகளை தயாரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட வெளியிடங்களை சேர்ந்தோர் இருப்பின் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. –(3)