செய்திகள்

கொழும்பு துறைமுக நகர திட்டம்: ரணில் மட்டுமே கருத்து வெளியிட முடியும்

சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே அறிக்கை வெளியிட முடியும் என தேசிய நிறைவேற்றுச்சபை தீர்மானித்திருக்கின்றது. இது தொடர்பாக அமைச்சர்களான ராஜித சேனாரட்ண மற்றும் லக்‌ஷ்மன் கிரியெல்லை ஆகியோர் தெரிவித்த தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.

துறைமுக நகரத்திட்டம் தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தக்குழு துறைமுகத்திட்டத்துடன் தொடர்புபட்ட அனைத்துவிடயங்களையும் ஆராய்ந்து 45 நாட்களுக்குள் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.