செய்திகள்

கொழும்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்கு மொஹான் பீரிசிற்கு தடை

முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து சதிப்புரட்சி முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிற்குள்ளாகியுள்ள பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் கொழும்பில் நடைபெற்ற பிராந்திய மாநாடொன்றில் கலந்துகொள்வதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.
திங்கட்கிழமை கொழும்பில் ஆரம்பமாகிய இந்த மாநாட்டில் பிரதம நீதியரசர் கலந்துகொண்டால் தாங்கள் அதனை புறக்கணிக்கவேண்டியிருக்கும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்ததை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மாநாட்டிற்பு அவரிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை இரத்துச்செய்யவேண்டும்,அவர் கலந்துகொண்டால் மாநாட்டிலிருந்து வெளியேறுவோம் என எச்சரித்திருந்தோம் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.